• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி..,

ByK Kaliraj

Aug 26, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான யோகாசன போட்டிகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக மயூராசனம், சிரசாசனம், சக்ராசனம், அஷ்டவக்ராசனம் உள்ளிட்ட கடினமான ஆசனங்களை செய்து காண்பித்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். 12 வயதுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் அடுத்த கட்ட மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவர் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.