தேனி தெற்கு மாவட்டம், கூடலூர் இந்து முன்னணி சார்பாக வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 32-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

இவ்விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர துணைத்தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் V. சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் R. பாலமுருகன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆச்சி. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில், திருமேனி கமிட்டி பொறுப்பாளர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, ஆன்மீக முறைப்படி விழாவை சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர பொறுப்பாளர்கள் செளந்தர், ஜெகன், சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திருமேனி கமிட்டி பொறுப்பாளர்கள் 80 பேர் பங்கேற்று விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாடினர்.




