சிவகாசி அருகே தாயில்பட்டியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தாயில்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 58 )என்ற தொழிலாளி பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 40 சதவீத தீக்காயத்துடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சம்பவம் அறிந்து வெம்பக்கோட்டை, மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
அடுத்தடுத்த அறைகளில் தீ பறவாமல் தடுத்தனர். விபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் கொடுத்த புகார் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




