மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக பேருந்து வசதி இல்லாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் கிராம மக்கள் நடந்து சென்ற விராதனூர் கிராமத்திலிருந்து பணிகளுக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளனர். உடனடியாக 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் இன்று முத்தாங்குளம் கிராமத்திலிருந்து சிந்தாமணி வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை கிராம மக்களுடன் சேர்ந்து கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கிராம சிறுவர்கள் சிலர் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்கள் போல் வேடம் தரித்திருந்தனர் அவர்களுடன் அமைச்சர் சி டி ஆர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசும்போது:
பஸ் வசதி இல்லாமல் இந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி விட்டார்கள் கடந்த காலங்களில் பெண் பிள்ளைகள் எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தை நிறுத்தி விட்டார்கள் இது அடிப்படை வசதி இதை கூட செய்யாமல் கடந்த ஆட்சியில் இருந்து உள்ளார்கள். நாம் அதனை நிறைவேற்றி உள்ளோம் அவசியம் நீங்கள் வாருங்கள் என்றார்கள் அதனால் வந்து கலந்து கொண்டுள்ளோம்.
சட்டசபையில் பேசத் தெரியாமல் எங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் கூறுவது குறித்த கேள்விக்கு:
மானிய கோரிக்கையில் என்ன நடைமுறையோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தேவையில்லாததை அவர்கள் பேசும்போது அதற்கான பதிலை நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களுக்கு ஊழல் என்றாலே கோபம் வருகிறது கட்சி நிதி என்றால் கோபம் வருகிறது. கட்சி நிதி இல்லாமல் எவ்வளவு ஆண்டு காலம் கட்சி நடத்த முடியுமா? நீங்கள் லஞ்சம் இல்லாமல் ஏதாவது ஒரு சான்றிதழை பெற முடியுமா? பிறப்பு முதல் இறப்பு வரை அரசு அலுவலகங்களில் ஒரு கையெழுத்து பணம் இல்லாமல் பெற முடியுமா? ஆனால் இன்றைக்கு சூழ்நிலை எப்படி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் வாங்கப்படுகிறது என்றால் அது யாருக்கு போகிறது. அது எல்லாம் கட்சி நீதி என்றால் கோவம் வருகிறது.

ஆதாரமில்லாமல் எந்த வழக்கையும் தொடக்க முடியாது தவறுகள் இருந்தால் கண்டிப்பாக வழக்கு தொடுக்க முடியும் வழக்கு தொடுக்காமல் இருக்க முடியுமா? மக்களுடைய பணம் நாளைக்கு நீதிமன்றமே கேள்வி எழுப்பும் டிரான்ஸ்பார்மர் வழக்கு மூன்று வருடமாக கிடப்பில் உள்ளது. மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கு ஏன் வழக்கு தொடுக்கவில்லை என நீதிமன்றமே கேள்வி எழுப்புகிறது இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற அவசியமில்லை மக்கள் தான் பலி வாங்கி விட்டார்களே ஊழல் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எந்த மாற்றமும் இல்லை.
ரசிகர் மன்றத்தில் செயல்படுவது போல் இன்னும் செயல்படுகிறார்கள் என மாணிக்கம் தாகூர் கூறியது குறித்த கேள்விக்கு: ஒரு சிலர் கொடுத்த பேட்டியின் அடிப்படையில் சொல்லி இருப்பார் எங்க தலைவர் பொறுத்து இல்லை சின்ன சின்ன கருத்துக்கள் எங்கள் அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள் தவிர எங்கள் தலைவரை குறிப்பிடவில்லை.
எதிர்க்கட்சிகள் கார் வேண்டாம் என்று சொல்லுவது குறித்த கேள்விக்கு:
30 கோடி 40 கோடி செலவு செய்து சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள் சும்மாவா வருவார்கள் அவர்கள் 10 கார் இருக்கும் 15 தொழில் இருக்கும் ஆயிரம் கோடி பணம் இருக்கும் ஆனால் அடிப்படை வசதி இல்லை மக்களுக்கு செய்து கொடுப்பதில்லை. இதற்கு முன் இந்த தொகுதியில் எத்தனை எம்எல்ஏக்கள் இருந்தார்கள் எத்தனை கார் இருந்து என்ன பிரயோஜனம் இந்த ஊருக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. சொந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூட போகாத எம்எல்ஏ 5 வருடம் 10 வருடம் இருந்து என்ன பிரயோஜனம் மக்கள் சேவை அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் வேலை தொகுதிக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றால்தான் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரியும். வெற்றி பெற்றதோடு சரி தொகுதி பக்கமே போவதில்லை.
இந்த கிராமத்தில் எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சர் வரவில்லை அதனால் பஸ் வரவில்லை. ஓட்டு கேட்க வராமலேயே மக்கள் இருந்திருக்கிறார்கள் மக்களுக்கு அதிமுக இல்லையென்றால் திமுக என்று தான் இருந்தது. ஆனால் இப்போது எங்கள் அண்ணன் முதல்வர் வந்தவுடன் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்ட தெளிவான முடிவை எடுத்து உள்ளார்கள் ஆர்.ஜ முதல் தாசில்தார் வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் என எல்லோரிடமும் கார் உள்ளது எம்எல்ஏக்கு இருக்க கூடாதா 5 கார் வைத்திருக்கிறோம் 10 கார் வைத்திருக்கும் தொகுதி பக்கமே போகாமல் எதற்கு அத்தனை கார் போய் வசூல் பண்ணுவதற்காக மக்கள் சேவை செய்ய 1 கார் போதும் அது கண்டிப்பாக அரசாங்கம் வழங்கும்.
திமுக பாஜகவுடன் சேர்வது போன்ற கருத்துக்கள் பரவி வருவது குறித்த கேள்விக்கு:

அவர்கள் ஏற்கனவே பாஜகவுடன் சென்று விட்டார்கள் பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் தான் திமுக உள்ளது.தொகுதி மறுவறைக்கு எதிராக அவர்கள் வாக்களிக்க போறீங்களா? இல்லையா? இதுவரை ஒத்த வார்த்தை வரவில்லை அனிதா ராதாகிருஷ்ணன் சொன்னார் திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக போகிறார் என்று, கனிமொழி சொல்கிறார் டீ விருந்துக்கு தான் சென்றோம் அவர்கள் ஆல்ரெடி பாஜகவில் தான் இருக்கிறார்கள்.
எம்பிக்கள் சேர்ந்து ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள் வருகிற தேர்தலில் எங்கள் கட்சியில் எம்பிக்கள் வந்தவுடன் ஏனென்றால் இந்தியா கூட்டணியில் எம்பிக்கள் உள்ள கட்சியை தான் சேர்க்க முடியும் எல்லா கட்சியும் சேர்த்தால் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சி என்றால் ஆயிரம் கட்சியை சேர்க்க வேண்டி இருக்கும் எங்களுக்கு எம்பிக்கள் வந்தவுடன் அதில் இணைந்து செயல்படுவோம்.
மதுரைக்கு முதல்வர்கள் வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் இல்லை சட்டசபை நடப்பதால் அந்த மாதிரி எந்த முடிவு எடுக்கப்படவில்லை முடிவு ஆனது என்றால் கண்டிப்பாக அறிவிக்கப்படும் நன்றி என்றார்.




