• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா வில்நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைகலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் உற்பத்தி கூடங்களில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி நிறுவனங்களில்நூற்பு, விசைத்தறி நெசவு,துணி வெட்டுதல், தையல், மற்றும் சிப்பமிடுதல்ஆகிய உற்பத்திப் பணிகளை விரிவாகப் பார்வையிட்டார். தொடர்ந்து, தொழிலாளர்களின் பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட வசதிகள், ஏற்றுமதித் தரம் மற்றும் பசுமை ஆற்றல் பயன்பாடு குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டிடம் வளாகத்தை பார்வையிட்டார். அப்போது கட்டுமானப் பணிகளின் தரம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களுக்கான சேவை அறைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு பணிகளைத் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குட்லாடம்பட்டி பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 5.3 கி.மீ நீளச் சாலைப் பணிகளைப் பார்வையிட்டு, சாலையின் தரம் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், குட்லாடம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் தோட்டத்தினைப் பார்வையிட்டார்.

அங்கு பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் பராமரிப்பு, நீர் மேலாண்மை மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மதுரை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, தாசில்தார் சுந்தரவேல், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமார்த்தாண்டம், மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.