• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே அம்மன் கோவில் திருவிழா..,

ByS.Ariyanayagam

Aug 21, 2026

திண்டுக்கல் டவுன் இந்திராநகர், முருகபவனம், பழனி ரோடு பகுதியில் அமைந்துள்ள 51 அடி உயர ஸ்ரீ வைஷ்ணவி காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, வைஷ்ணவி காளியம்மனுக்கு 16 அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மகாலட்சுமி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு நோன்பு கயிறு அணிந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் நிர்வாகிகள், பக்த கோடிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்று சென்றனர்.