• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்..,

ByKalamegam Viswanathan

Aug 20, 2026

மதுரை பாத்திமா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தை (YRC) சார்ந்த மாணவிகளுக்கு, மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது..

இதில் போக்குவரத்து விழிப்புணர்வு உங்களில் இருந்து தான் துவங்குகிறது வேண்டும் எனும் தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்பான போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு G.. பூர்ணகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.. இதில் சமூகத்திலும்,மாநகரின் போக்குவரத்து முன்னேற்றத்திலும் மாணவியர்கள் எந்தெந்த வகைகளில் தமது பங்கீட்டினை செலுத்த வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்

இந்த போக்குவரத்து விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்க முகாமினை… பாத்திமா கல்லூரி போக்குவரத்து கிளப் மாணவியர்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை திருமதி சங்கீதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்..இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவியர்களும் ஐந்து பேராசிரியைகளும் கலந்து கொண்டனர்.. இறுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக மாணவியர்களும் பேராசிரியைகளும் காவல்ஆய்வாளர் முன்பு உறுதிமொழி மேற்கொண்டனர்