• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

நவீன தொழில்நுட்ப குறியீடுடன் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமாருக்கு சொந்தமான குமரன் தங்கப் பண்ணை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி செம்மேடு பகுதியில் உள்ளது.இங்கு 50 வதுசுதந்திர தினம் மற்றும் குமரன் குழுமம் நிறுவன தலைவர் பசுமை காவலர்முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக 1000 பல்வகையான மரக்கன்றுகள் நடும் விழாவும்அசைவ அன்னதானமும் நடந்தது.

இந்த விழாவிற்குகவுன்சிலர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கி விளக்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்து க்கள். இன்று என் தந்தையின் பிறந்த நாள் இன்றைய தலைமுறையினர் மண்ணில் சுதந்திரத்தை காற்றை சுவாசிப்பது போல, என் தந்தையால் எக்காலத்திலும் அழியாத இயற்கை யின் சுதந்திர காற்றே சுவாசிக்கவும், மண்ணின் வளம்காக்க மட்டுமல்ல மனிதனின் வளத்தை காக்கவும் மரங்கள் தேவை என்பதை என் தந்தையிடம் இருந்து பாடமாக கற்றுக் கொண்டேன்.

இன்றைய சூழ்நிலை யில் பூமி வெப்பமயமாகிபேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டு போகிறது.கடந்த மாதம் கூட உலக அளவில் 7வது இடத்திலும் இந்திய அளவில் 3 வது இடத்திலும் மதுரை மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இருந்தது.இந்த தாக்கம் மீண்டும் வராதபடி தடுக்க இயற்கையோடு நாமும் ஒன்றிணைந்து ஊர் கூடி ஒன்றிணைந்து தேர் இழுப்பதை போல கைகோர்த்து மரங்களை நடவு செய்து வளர்ப்பதன் மூலம் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

அந்த வகையில்நம் பகுதியில் தற்போது குமரன் கோல்டன் பார்ம் கேஜிஎப்,என்ற முன்னெழுத்தில் உருவாக்கி அதன் மூலம் முதல் கட்டமாக என் தந்தையாரின் பிறந்த நாளில் சுதந்திர தினத்தன்று அவரது திருக்கரங்க ளால் மரக்கன்று நடவும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மரக்கண்டனை நடவு செய்யும் போதுநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கி ஆர் கோடு பெயர் பலகையோடு நடவு செய்ய படுகிறது.இதில் மரத்தின் பெயர் அது எந்த வகையைச் சார்ந்தது எப்போது பலன் தரும் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இதை எதிர்கால சந்ததியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதில் நிழல் தரும் மரங்கள் பழக்கன்றுகள், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் அடங்கும். இனி அடுத்து இந்த பணியை தொடர்ந்து செய்து பத்தாயிரம் மரக்கன்றுகள் வரை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் சீதாராமன் அரசுத்துறை சிறப்பு அதிகாரி சரவணன வீரையா,பங்களா சி. மூர்த்தி, கச்சைகட ரவி டாக்டர் பொன் யாழினி பாலாஜி, புஸ்கோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோணிகா சந்திரா, தாளாளர் ஷீலா பவுல்,இயற்கை விரும்பி மரக்காவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.