• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து 3ம்ஆண்டு ரத்த தானம் முகாம்..,

ByK Kaliraj

Aug 16, 2026

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் ஜேசிஐ தாயில்பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு ஐந்து கிலோ அரிசி பை உள்ளிட்ட பொருட்களை வழங்கி ரத்ததானம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன், தாயில்பட்டி திமுக கிளை செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

73 பேர் இரத்த தானம் வழங்கினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதர கண்ணன் நன்றி தெரிவித்தார்.