மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தனர்.

தமிழாசிரியர் நூருல்லாஹ் வரவேற்புரையாற்றினார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு.அ.விஜய் அன்பன் கல்லாணை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்கள் தேசப்பற்று மிக்கவர்களாகவும், ஒற்றுமை உணர்வோடும் வாழ வேண்டும் என்று சுதந்திரதின சிறப்புரையாற்றினார்.

மேலும், கபடிப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், புத்தகம் மதிப்புரை செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தமிழக வெற்றிக் கழகம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயம்.K.கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். மதுரை மாவட்ட நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பளர் இஸ்மத் பாட்ஷா இலக்கிய பூங்கா மாணவர்களுக்கு 30 புத்தகங்கள் வழங்கினார்.
மாணவர்கள் ஷியாம்சுந்தர், முகமது சபீர், முகமது ரபீஸ் ஆகியோர் புத்தக மதிப்புரை செய்தனர். மாணவர் அப்துல் ரஹ்மான் ”சும்மாவா கிடைத்தது சுதந்திரம்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் முகைதீன் பிச்சை நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியினை தமிழாசிரியர் தெளபிக் ராஜா தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது செய்திருந்தனர். இவ்விழாவிற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், புதூர் வாழ் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.





