• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிறப்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்..,

ByK Kaliraj

Aug 15, 2026

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

தாயில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும், குண்டாயிருப்பு, T.N.C. ஆலங்குளம், ராமுத்தேவன்பட்டி, ஏ.லட்சுமியாபுரம், எட்டாக்கப்பட்டி, கங்கர்செவல், வெற்றிலையூரணி உள்ளிட்ட கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்து விவாதித்தனர்.

கிராம சபைக் கூட்டங்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.