• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய நிகழ்ச்சி..,

ByS. SRIDHAR

Aug 14, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சி திருமலைராய சமுத்திரம் தச்சன்குளம் பகுதி ஏழு ஊரு கிராமத்தார்கள் இணைந்து நடத்தும் அருள்மிகு ஒற்றைப்பனை அய்யனார் கருப்பர் சுவாமிகளின் ஆடி மாத குதிரை எடுப்பு நிகழ்ச்சி முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவகங்கை மதுரை தேவகோட்டை தஞ்சாவூர் காரைக்குடி புதுக்கோட்டை அறந்தாங்கி மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் மொத்தம் பெரிய மாநாடு 8 வண்டிகளும் சிறிய மாட்டு வண்டிகள் 19 குதிரை வண்டிகள் இரண்டு சுற்றுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் 10 குதிரை வண்டிகளும் இரண்டாம் சுற்றில் 9 குதிரை வண்டிகளும் விடப்பட்டன போட்டியினை ஏழு கிராம ஊரார்கள் முன்னிலையில் முதல் போட்டி பெரிய மாட்டு வண்டியினை துவக்கி வைத்த கை குறிச்சி ஊர் தலைவர் மற்றும் ஏழு கிராம மக்களும் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

போட்டியில் வெற்றி பெறும் மாட்டு வண்டி உரிமையாளருக்கும் மாட்டு வண்டி ஓட்டி வந்த சாரதிக்கும் ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியானது கை குறிச்சி பகுதியில் இருந்து முத்துப்பட்டினம் வரை சென்று வருகின்ற தூரம் 8 மயில் கணக்கிடப்பட்டு பெரிய மாட்டு வண்டி கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதனை கைகுறிச்சி ஏழு கிராம பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் சாலையில் இருபுறங்களில் காத்திருந்து சீறிபாய்ந்து செல்லும் மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் பாய்ந்து செல்வதை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.