• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல்..,

ByK Kaliraj

Aug 13, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் 200க்கும் அதிகமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெண்கள் பட்டாசு தொழில் மற்றும் விவசாயம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கிராமத்தில் சின்டெக்ஸ் நீர் மற்றும் குடிதண்ணீர் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வரவில்லை என்றும் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை என்றும் இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் அதிகமான பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் சம்பவம் தகவல் அறிந்து வெம்பக் கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீலா மற்றும் 7000 பண்ணை காவல் ஆய்வாளர் குமாரி அவர்கள் உடனடியாக கண்டியாபுரம் கிராமத்திற்கு நேரடியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது இரண்டு நாட்களுக்குள் கிராமம் முழுவதும் தண்ணீர் தெரு விளக்கு சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தனர் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.