• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கரும்புச்சாறு எந்திரத்திற்குள் சிக்கிய சட்டை நல்வாய்ப்பாக காயம் இன்றி தப்பிய வியாபாரி..,

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே கரும்புச்சாறு கடை ஒருவர் நடத்தி வருகிறார் வழக்கம்போல் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய கரும்புச் சார் இயந்திரத்தில் கரும்பை மாட்டி கரும்புச்சாலை தயாரித்துக்கொண்டு இருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சட்டையானது திடீரென கரும்பு சாறு எடுக்கும் எந்திரத்திற்குள் திடீரென மாட்டிக் கொண்டது. உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் சுதாரித்து மோட்டார் மூலம் இயங்கக்கூடிய அந்த கரும்புச்சாறு இயந்திரத்தை உடனடியாக அனைத்தும் அருகே உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் அவர் சட்டையை எடுப்பதற்கு முயற்சி எடுத்து சட்டையை கிழித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எதிரே காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் துரித செயல்பாட்டினால் மிகப்பெரிய காயத்திலிருந்து கரும்புச் சார் வியாபாரி காயம் இன்றி தப்பினார். சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.