• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி பங்களாவில் மணிகண்டன் மர்ம நபர்களால் குத்திக் கொலை போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 9, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான ஆண்டிபட்டி பங்களாவிற்கு நேற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பழிக்கு பழியாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி அருகே திருமணமான இளைஞர் கொலையான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது இதைத்தொடர்ந்து இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.