• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஓய்வுபெற்ற பெண் மருத்துவரிடம் ₹98 லட்சம் சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!

BySeenu

Oct 3, 2026

கோவையில் பெண் மருத்துவரிடம் டிஜிட்டல் கைது எனக் கூறி ரூபாய் 98 லட்சம் மோசடி செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்த வயதான பெண் மருத்துவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறியதுடன் நீங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கை வைத்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்து உள்ளீர்கள் எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம் உங்கள் வங்கி கணக்கை சோதனை செய்ய வேண்டும்.

அதில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் ஆய்வு செய்த பிறகு அந்த பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்து விடுவோம் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் வீட்டின் அருகே துப்பாக்கி என்ற போலீசார் கண்காணித்து வருகிறார்கள் அவர்கள் உங்களை கைது செய்து விடுவார்கள் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

அதை நம்பி பயந்து போன அந்தப் பெண் மருத்துவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 98 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த நபர்கள் திரும்பி மருத்துவரின் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பவில்லை அப்பொழுது தான் அவருக்கு தன்னிடம் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூபாய் இரண்டு 98 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரேன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரை தொடர்ந்து பத்து நாட்கள் கண்காணித்து பணத்தை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் கேரளம் சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜசேகர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் கூறும் போது; பெண் மருத்துவரிடம் ரூபாய் 98 லட்சம் மோசடி செய்ததில் ராஜேஷின் வங்கி கணக்கு ரூபாய் 20 லட்சம் சென்று உள்ளது. பின்னர் அவருடைய வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களுக்கு பணம் சென்று உள்ளது. அத்துடன் ராஜேஷ் மற்றும் அவருடைய மனைவி பெயரில் பல வங்கி கணக்குகள் உள்ளன. அந்த வங்கி கணக்குகளில் இருந்து நடந்த பண பரிமாற்றம் குறித்தும் இந்த வழக்கில் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது. என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.