• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா..,

Byமுகமதி

Aug 8, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022- 2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு முதலாவது பட்டமளிப்பு விழா 8.8.2026 சனிக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.ஜானகி (முழு கூடுதல் பொறுப்பு) தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் க. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். “மாணாக்கர்கள் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொள்ளும் சிற்பிகளாக இருக்க வேண்டும். மேலும் பட்டம் ஏற்ற மாணவ மாணவிகள் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இவ்விழாவில் கணிதவியல் இணைப்பேராசிரியர்க. அர்ச்சுனன், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், ஆங்கிலத் துறைத் தலைவர் செ. மணிகண்டன் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் பட்டமளிப்பு பெயர் பட்டியல் வாசித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக எம். அன்புச்செழியன் (முதல்வர் மன்னர் கல்லூரி புதுக்கோட்டை) ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியின் தலைமை ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

இவ்விழாவில் தமிழ், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ,மற்றும் வணிகவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 157 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும், மாணவ மாணவியர்கள் பட்டமேற்பு உறுதி மொழி ஏற்று இறுதியாக நாட்டு பண் இசைத்து விழா நிறைவு பெற்றது.