• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கலைஞரின் நினைவுநாள் மௌன ஊர்வலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..,

ByK Kaliraj

Aug 7, 2026

சிவகாசி மாநகர திமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,

மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையிலான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலம் சென்று அலங்கரிக்கப்பட்ட கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஐம்பெரும் உறுதிமொழி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.