• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் உள்ள மண் குவியல்கள் அகற்றம் பேரூராட்சி நடவடிக்கை..,

ByKalamegam Viswanathan

Aug 5, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பால பகுதியில் மன் குவியல்கள் குவிந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்தும் விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு சென்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து மேம்பாலத்தில் இருபுறமும் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும் மண் குவியல்கள் மூலம் விபத்து ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் ரயில்வே மேம்பாலத்தின் இரண்டு பகுதியில் பகுதிகளிலும் உள்ள மண் குவியல்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கருப்பையா எம்எல்ஏவிடம் மேம்பால பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே மேம்பால பகுதியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் மண் குவியல்கள் இல்லாமல் பள்ளங்கள் இல்லாமலும் சாலையை அடிக்கடி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.