புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

அந்தக் கோவிலில் தான் இந்த பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் சில இளைஞர்களும் சேர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள்.
அது குறித்து அந்த கிராம மக்களின் சார்பாக பார்த்திபன் என்ற இளைஞர் கூறுகையில் நாங்கள் கணபதிபுரத்தில் இருந்து வந்திருக்கிறோம். எங்களது கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில், குபேர கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் கோவில் என்று மூன்று கோவில்கள் இருந்தன. அந்த முத்துமாரியம்மன் கோவில் ஆனது கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
அதன் பேரில் 2020 ஆம் ஆண்டு கணபதிபுரம் முத்துமாரியம்மன் கோவில் டிரஸ்ட் என்று ஒரு டிரஸ்ட் உருவாக்கப்பட்டு அதன் பெயரில் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த கணக்கு வழக்குகள் எல்லாம் டெஸ்ட் மூலமாக நல்லபடியாக நிர்வகிக்கப்பட்டு நடந்து வந்தது. இது எங்களது வரவு செலவு கணக்குக்காக மட்டுமல்ல முறையான ஆடிட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் இந்த கோவில் தனிப்பட்ட முறையில் ஒருவர் அபகரித்திருக்கிறார். மாதாமாதம் 80 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது வருகிறது என்றும் அதை நாங்கள் எடுத்து செலவு செய்து வருகிறோம் என்று எங்கள் மீது ஒரு பத்து பேர் கொண்ட குழுவினர் சார்பாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதன் பேரில் கோவிலில் வந்து பூட்டு போட்டு விட்டார்கள். மீண்டும் ஐகோர்ட்டில் டைரக்சன் வாங்கி கோவில் பூட்டை திறந்து விட்டோம். மேலும் நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய சொல்லி விட்டார்கள் அதன் பெயரில் நாங்களும் வழக்கு பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பினோம். நோட்டீஸ் பார்த்தவுடன் இந்த கோவிலுக்கு கோவில் நிலங்களும் பார்த்திபன் பெயரில் தான் இருக்கிறது என்று அது பார்த்திபனுக்கு மட்டும் தான் சொந்தம் என்று அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோவில் எனக்கு மட்டும் சொந்தம் அல்ல. கிராமத்தின் சார்பில் இதுவரை 17 ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனா வேண்டுமென்றே எங்கள் மீது பெண்களைக் கொண்டே அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
முதலில் அந்த அவதூறை நிறுத்திக் கொள்ள வேண்டும். கணபதிபுரம் முத்துமாரியம்மன் கோவில் டிரஸ்ட் என்று தான் நாங்கள் அச்சடித்து இருக்கிறோம். இதற்குரிய ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்திலும் மாவட்ட ஆட்சியர் இடத்திலும் சமர்ப்பித்திருக்கிறோம்.

இந்திரலையில் இப்போது நாங்கள் தான் கோவிலை நிர்வாகம் செய்வோம் என்று பத்து பேர் கொண்ட ஒரு குழுவினர் வந்து முன் நிற்கிறார்கள். அவர்கள் சின்ராசு, கருணாநிதி, கதிர்வேலு, வீரய்யா, செந்தில், ரஜினி, ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் தான் வந்து இப்போது கோவில் பொதுவுடமைக் கோயில் என்றும் அதை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்றும் நிற்கிறார்கள். எனவே அவர்கள் மீதும் அவதூறு பரப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இப்போது இந்த கோவிலை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்காக அவர்கள் வீட்டுப் பெண்களை வைத்து தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் முயற்சி செய்கிறார்கள். தகுந்த ஆதாரங்களை அனைத்து இடங்களிலும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். தேனி மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார் என்றார்.




