• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,

ByN.RajaMurugan

Aug 3, 2026

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு திரிஷாவிற்கு அரசியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் முக்கியமாக தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷா விற்க்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், “எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை” என்றும் “மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்” என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரின் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த பொதுமக்கள் திரிஷா அரசியலுக்கு வருகிறாரா என்ற ஆச்சரியத்துடன் கடந்து செல்கின்றனர்.