கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது…

கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், டாக்டர் என்.ஜி.பி. கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் புவனேஸ்வரன் வரவேற்புரையாற்றினார்..
கல்லூரி முதல்வர் டாக்டர் பிரபா, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கல்லூரி பெற்றுள்ள சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவில்,சிறப்பு விருந்தினராக மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, தொழில்நுட்ப உலகின் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து கற்றுக்கொள்வதும், புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுவதும் வெற்றிக்கான முக்கிய அம்சங்கள் எனக் குறிப்பிட்ட அவர், தன்னம்பிக்கையுடன் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்த விழாவில் 576 இளநிலை மற்றும் 254 முதுநிலை மாணவர்கள் என மொத்தம் 830 பேருக்கு பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் அருண் என். பழனிசாமி, அறங்காவலர் திருமதி மதுரா வி. பழனிசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




