• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…

ByK Kaliraj

Aug 1, 2026

சென்னை அருகே சிறுசேரி பகுதியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் மீனாட்சிபுரம் செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து ஆனது சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது,

இந்த விபத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற திருப்பூர் பகுதியைச் சேர்ந்த குருசாமி (53) என்ற டிரைவர் உட்பட பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்,

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் தாலுகா காவல்துறையினர் பயணிகள் மற்றும் டிரைவர் ஆகியோரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.