• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..,

ByK Kaliraj

Jul 31, 2026

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கிருத்திக் ரிஷி எனும் பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது .

இந்த ஆலை மினி நாக்பூர் உரிமம் பெற்றதாகும் இங்கு 15 க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7:45 மணியளவில் கெமிக்கல் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது அறையின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது. இந்த தீ விபத்து காரணமாக மற்ற அறையில் இருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடினார்கள் இது குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன் தலைமையில் தீ மேலும் பரவ விடாமல் அணைத்தனர்.

இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள காக்கி வாடான்பட்டியைச் சேர்ந்த சொக்கர் என்பவர் மகன் சுப்பிரமணி வயது 62 என்பவர் 80 % காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இது குறித்து முத்துசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் சுப்பிரமணியன் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்