• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பாண்டியர் வரலாற்றுப் பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்திப்பு..,

ByK Kaliraj

Jul 31, 2026

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை, பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தலைமை ஆய்வாளர் மணிகண்டன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பாண்டியர் வரலாறு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில், பாண்டிய நாட்டின் தொன்மையான வரலாற்றை ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் தொல்லியல் ஆதாரங்களை முறையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

மேலும், பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கால அட்டவணையை ஆதாரப்பூர்வமாக தொகுத்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகள், வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஆய்வுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பாண்டியர் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாண்டியர் வரலாற்றைப் பாதுகாக்கும் பணிகளில் அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியமும், வரலாற்று மரபுகளை பாதுகாக்க தேவையான ஒத்துழைப்பும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது
இச்சந்திப்பு, பாண்டியர் வரலாற்று ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.