• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா..,

BySeenu

Jul 28, 2026

இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார்.

கவுரவச் செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி. சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக, ஐ.எம்.ஏ தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
டாக்டர் ஏ.கே. ரவிகுமார் , மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் சி.பி சண்முகசுந்தரம், முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவின் தொடக்கமாக ஐ.எம்.ஏ கோவை நுண்கலை குழுவினரின் சிறப்புப் பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து பிரார்த்தனைப் பாடல், மருத்துவர்கள் உறுதிமொழி மற்றும் கொடி ஏந்தி மரியாதை செலுத்துதல் ஆகியவை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சம்பத்குமார் 56 மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழா நிறைவில் நிதிச் செயலாளர் டாக்டர் ஆர். பாலமுருகன் நன்றியுரை ஆற்றினார்.