மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராம மக்கள், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சர் நிர்மல் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டும், சோளங்குருணி கிராம மக்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் தவெக. நிர்வாகிகள் கலந்து கொண்டு அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மதுரை சோளங்குருணி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமையான போத்திராஜன்–வள்ளியம்மை திருக்கோவிலுக்கு செல்லும் பாதையை, தனியார் நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்ததால், அமைச்சர் நிர்மல் குமாரிடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொது மக்கள் முறையிட்டனர். அமைச்சராக பொறுப்பேற்று பின்பு அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு மக்கள் கோயில் திருவிழாவை கொண்டாடுவதற்கு வழிவகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




