• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி 11ஆம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2026

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவன் மாரி செல்வம் தொடர்ந்து இடைவிடாமல் 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த மாணவன் தனது எட்டாவது வயதில் தொடர்ந்து இடைவிடாமல் ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த சாதனை முயற்சி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி, சர்வதேச சிலம்பம் குழு, பள்ளி நிர்வாகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் உடற்கட்டுப்பாட்டுத்திறன் மேம்படுத்துவது போன்றவையை கருத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.