புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் பதினொன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது வெற்றிக் கோட்பாடுகள் கொண்ட பதாகைகள் அடங்கிய வாசகங்களுடன் மாணவர்கள் நடைப் பேரணி மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி அருகே தொடங்கிய இந்த பேரணியானது ஜல்லிக்கட்டு காளை சிலை அமைந்திருக்கும் சாலைகள் சந்திப்பு வழியாக கலைஞர் பூங்கா வரை சென்றடைந்தது. இந்த நடைப் பேரணியில் மாணவர்கள் கலாமின் கோட்பாடுகளை முழங்கிக் கொண்டே வந்தனர் . பள்ளியின் நிர்வாக பொறுப்பாளர் அருட்சகோதரி புனிதா ரோஸ்லின் DMI, பள்ளியின் முதல்வர் டி. ஆன்சி புஷ்பதாஸ், அருட்சகோதரிகள், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் இப்பேரணி சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. பேரணியில் நிறைவாக மாணவ மாணவியர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுகள் குறித்த கருத்துரைகளை வழங்கினர்.




