• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் ஜனநாயகன் படத்திற்காக பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2026

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிட ப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23ஆம் தேதி ஜனநாயகன் படம் திரையிடப்பட்டது.

இதற்காக சோழவந்தான் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தமிழக முதல்வர் விஜயின் படம் வைத்த பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகளை
சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்திருந்தனர். இந்த நிலையில் படம் திரையிடப்பட்டு ஐந்து நாட்கள் ஆகும் நிலையில் தற்போது வரை பேனர்கள் மற்றும் கட்அவுட் களை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அகற்றாததால் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தை விளைவிக்க கூடிய அளவிலும் பேனர்கள் இருந்து வந்தது இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் பேனர்களை அகற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நிலையில் இன்று வரை பேனர்களை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேல் நாச்சிகுளம் சென்ற54c. 2274 என் கொண்டஅரசு பேருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி செல்லும்போது சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன். பட வெளியிட்டு பேனர் பேருந்தின் மீது பெரிய சத்தத்துடன் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் விளம்பர பேனரில் இருந்த கம்பிகள் பேருந்தின் மேல் பக்கத்தில்
பட்டு பேருந்து முன் பக்கம் வழியாக விழுந்ததில் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது மேலும் பேருந்து முன் பக்க பெயர் பலகையும் பெயர்ந்து கீழே விழுந்தது பெரிய சத்தத்துடன் பேனர் விழுந்ததில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர் சிறிது தாமதித்து இருந்தாலும் பேருந்துக்குள் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அளவில் பேனர்கள் கட்ட அவுட்டுகள் வைக்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் சோழவந்தானில் முதல்வரின் பட வெளியீட்டு விழாவிற்கு வைத்திருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி மற்றும் பெயர் பலகை உள்ளிட்டவைகள் நொறுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் உடனடியாக சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.