• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் “சங்கமம்’98” வெள்ளி விழா சந்திப்பு ..,

BySeenu

Jul 26, 2026

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 1998–2001 கல்வியாண்டு முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பான “சங்கமம்’98” நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி. அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலர் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

இதே போல 25 ஆண்டுகளுக்கு முன்னால் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கல்லூரியில் நடைபெற்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சகளில் அதிக அளவிலான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட சந்திப்பாக இந்த நிகழ்வு அமைந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பழைய வகுப்பறைகளை பார்வையிட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கல்வி கற்பித்த பேராசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி நன்றியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நினைவுப் பகிர்வு மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் எளிதாக இணைந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேபோல், கல்லூரியில் தற்போது பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு ஆதரவாக சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.