• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசு ஊழியர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 24, 2026

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கி பின்பு வாழ்த்து தெரிவித்து பட்டு வேட்டி போர்த்திய மகிழ்ச்சியான தருணம்.

மேலும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பிரகாசம் என்கிற குட்டி அவர்கள், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண்குமார் அவர்கள், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் அவர்கள், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய பிரபு அவர்கள், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரவி அவர்கள் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்வில் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜே.ஸ்டாலின மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கடம்பத்தூர் விமல், திருப்பாச்சூர் விஜய் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்