• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தி சென்னை மொபைல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அசத்தல்..,

BySeenu

Jul 24, 2026

ஆடி மாதத்தை முன்னிட்டு தி சென்னை மொபைல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ், ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர் வாங்கிய வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் கவிதை எழுதி சமர்ப்பித்தனர். அதில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்ட நிகழ்ச்சி கோவை புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்களை தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆடி சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதுடன், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த தங்க நாணயத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோவையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.