• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…

ByK Kaliraj

Jul 22, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எம்எல்ஏ தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார்.

இதன்படி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டலகுத்தூர், கணபதியாபுரம் சிறுகுளம்,நத்தத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசுகையில்,தங்களுக்கு என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள், 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கு வருகை பதிவேடு செய்வதற்கு தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கருவிழி பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது என தெரிவித்தனர். அது சில நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டு விடும்’ என்றார். இதில் சாத்தூர் எம்எல்எ கடற்கரைராஜ், நகர் மன்ற தலைவர் குருசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.