கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் மாவட்ட ஆட்சியர் அமைச்சர் சம்பத் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திற்கு முன்புறமாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை பார்த்து காரில் இருந்து இறங்கி அவர்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணை தலைவர் கூறியதாவது
பல ஆண்டுகளாக நமது தாய்மார்களின் பிரசவ காலத்தில் அவர்களுக்கு முழுமையான மற்றும் உயர்தரமான மருத்துவச் சிகிச்சையை வழங்கி வரும் முதன்மை நிறுவனமான ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நான் கோவை வந்துள்ளேன்.
கோவைக்கு வருவதாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தாலும் சரி, அது எனக்கு எப்போதும் தனி மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தொலைக்காட்சிகள் வாயிலாக தமிழக மக்கள் அனைவருக்கும் தமது அன்பையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்தும், அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர் இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி – இதற்கு உரிய பதிலை அரசியல் தலைவர்களே அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் தேசத்தின் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்துப் பேசிய அவர் “மாணவர்கள் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்திய தேசம் இன்று சர்வதேச சக்திகளுக்குப் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றால், அதற்கு நமது ஒற்றுமையே முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் தற்போதைய புதிய அரசு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு செயல்படுவதற்குச் சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.




