• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனம்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2026

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் சென்று, வகுப்பறைகளில் இருந்த SFI மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்ட செயலாளர் சி. டேவிட் ராஜதுரை, DYFI நிர்வாகி இரவி ஆகியோரைக் கைது செய்யக் காவல்துறை முயன்றிருப்பது அப்பட்டமான அத்துமீறலாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தின் உரிமையைப் பயன்படுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர் சங்கத் தலைவர்களைப் பல்கலைக்கழக வகுப்பறைக்குள் நுழைந்து கைது செய்யும் அளவுக்குக் காவல்துறையைக் கட்டவிழ்த்துவிட்டது யார்?

இந்த அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கோருகிறேன்.
என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் அறிக்கையாக வீடியோ பதிவியோடு பதிவிட்டுள்ளார்