• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் நூல் அறிமுக விழா சுயமரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2026

சோழவந்தான் ஆனந்த மஹால் வளாகத்தில் நூல் அறிமுக விழா மற்றும் சுய மரியாதை சுடரொளிகள் பட திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு திராவிடக் கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் வக்கீல் கணேசன் தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் எரிமலை, முத்துக்கருப்பன், வீரராகவன்தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகுருநாதன் வரவேற்றார். தங்கராசு விழாவினை தொகுத்து வழங்கினார். குணசேகரன் சுயமரியாதை சுடரொளிகள் படத்தை திறந்து வைத்தார்.

கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் பேசினார்கள். சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர்
எஸ்எஸ்கே. ஜெயராமன் நூலை வெளியிட்டார். முள்ளிப்பள்ளம் பவர் பள்ளி தாளாளர் ரஜினிகாந்த் நூலைப் பெற்றுக் கொண்டார். நகர செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். இதில் சோழவந்தான் மற்றும்சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திராவிடக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.