மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்வி எம் மருது மஹாலில் முத்து முருகா அறக்கட்டளை வக்கீல் சிவா லீகல் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.

முகாமை எம் வி எம் குழும தலைவர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் சட்ட ஆலோசனைகளை நோட்டரி பப்ளிக் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கோட்டை கிராம தலைவர் வக்கீல் சிவா வழங்கினார் முகாமில் குடும்பப் பிரச்சனை கடன் பிரச்சனை சொத்து பிரச்சனை வாடகை பிரச்சனை குற்றவியல் பிரச்சனை உரிமையியல் பிரச்சனை வரதட்சணை விவாகரத்து மனைவி குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் தொழிலாளர் பிரச்சனை கொடுக்கல் வாங்கல் தொழில் நுகர்வோர் சைபர் குற்றங்கள் குத்தகை ஆவணம் தொடர்பான பிரச்சனை மருத்துவ அலட்சியம் சாலை விபத்து மற்றும் இழப்பீடு காவல்துறை தொடர்பான பிரச்சனை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பிரச்சனைகள் நீதிமன்ற வழக்குகள் நீண்ட கால நிலுவையில் உள்ளதை பற்றி வழக்காடி ஆலோசனை கூறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது,

சட்ட ஆலோசனைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழில் செய்து அனுபவம் பெற்றுள்ள நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சிவா தலைமையிலான வழக்கறிஞர் குழு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கினார்கள் முகாமில் கிராம பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் விவசாய தோழர்கள் மகளிர் உதவி குழுக்கள் அரசு ஊழியர்கள் பொது நல சேவகர்கள் வியாபாரிகள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகள் பெற்று சென்றனர்.
இலவச சட்ட ஆலோசனை முகாமிற்கான ஏற்பாடுகளை தக்காளி சுரேஷ் கேபிள் மணி முத்துப்பாண்டி சேகரன் ராமன் ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர் முகாமில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்




