மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்சனைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த பூஜைகளை பட்டர் கிருஷ்ணகுமார் செய்தார். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். அதேபோல் தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகரில்உள்ள ஐயப்பன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டுசிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கூழ் ஊற்றப்பட்டது iஇந்த ஏற்பாடுகளை திருப்பணி குழு பொருளாளர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

குட்லாடம்பட்டியில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் தியான மண்டப கோயிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கோபிநாத் செய்திருந்தார்.




