தமிழ்த் திரையுலகில் நடிப்பதைத் தனது கனவாகக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் ராஜேஷ்.

இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் தமிழை முறையாகக் கற்றுக் கொண்டு சினிமாவுக்கான நடனம், சண்டைப் பயிற்சிகள்,நடிப்புப் பயிற்சி வகுப்புகள் என திரைப்படத்தில் நடிப்பதற்குத் தகுதியான எல்லாமும் முறையாகக் கற்றுக்கொண்டு இருக்கிறார்.
இவர் இரண்டு புதிய தெலுங்குப் படங்களில் நடித்தும் வருகிறார். இருந்தாலும், இவர் தமிழ் சினிமா மீது ஈடுபாடும் பற்றுதலும் கொண்டவராக இருக்கிறார்.
காரணம்,

தமிழ்த் திரையுலகம் புதிய திறமைசாலிகளுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுத்து வாசல் திறந்து வைக்கும்.தமிழ் ரசிகர்களும் திறமையுள்ள புதியவர்களை வரவேற்று ஆதரிக்கும் மனம் படைத்தவர்கள்.
எனவே தமிழ்த் திரையுலகம் நோக்கி என் முழுக்கவனத்தைத் திருப்பி இருக்கிறேன் என்கிறார்
இதற்காகவே ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்திருக்கிறார். நல்ல கதைகளைக் கேட்டு மனம் கவர்ந்த பொருத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.
இவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து இவர்கள் நண்பர்கள் வாழ்த்தி அனுப்பி இருக்கிறார்கள்.

எனக்குத் தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். தமிழ்த்திரையுலகின் புதிய முயற்சிகள் என்னைக் கவர்ந்தவை. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவில் நடிப்பது என்னுடைய லட்சியம்.
விரைவில் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளேன், என்கிறார் நடிகர் ராஜேஷ்.





