• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மலைச்சாலையை கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு..,

தமிழக கேரளா எல்லையை இணைக்கும் கம்பமெட்டு மலை சாலை நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது தமிழக கேரளா எல்லையை தேனி மாவட்டத்தில் குமுளி கம்பம் மெட்டு போடி மெட்டு ஆகிய மலைச்சாலையில் இணைக்கின்றன.

இந்தப் பாதைகளில் நாள்தோறும் ஏலக்காய் தோட்டங்களுக்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவர். இந்த நிலையில் கம்பமெட்டு மலை சாலை சேதம் அடைந்து வாகன போக்குவரத்துக்கே மிகவும் சிரமம் ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை சரி செய்வதற்கு போக்குவரத்தை சுமார் 40நாட்களுக்கு மேலாக தடை செய்தனர். சாலை பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக பராமரித்தனர்.

அதன் அடிப்படையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேற்று பராமரித்த வந்த கம்பமெட்டு சாலையை பார்வையிட்டார் பொதுமக்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் வியாபாரிகள் வசதிக்காக சனிக்கிழமை முதல் போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவித்தார். கனரக வாகனங்கள் ஆன டிப்பர் லாரிகள் 20 நாட்களுக்குப் பிறகு இயக்கப்படும் என்று தெரிவித்தார்.