• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழா..,

ByRadhakrishnan Thangaraj

Jul 15, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினார்.

இதை போல் முகவூர் கர்மவீரர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக 11 ம் ஆண்டு அன்னதான விழா மற்றும் 124 பெண்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து ஊர்வலமாக 124 பால்குடம் எடுத்து சென்று காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வழக்கறிஞர் மணிகண்டன் தங்கராஜ் அன்பு ரோஸ்
கோகுல கண்ணன் ஏ மணிகண்டன் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன தனியார் திருமண மண்டபத்தில் அன்னதான விழாவும் நடைபெற்றது.