• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உடகோட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1) முகமது கனி, 19, த/பெ. சையது முகமது, சீத்தா லெட்சுமி நகர், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் மற்றும் 2) ஆகாஷ், 20, த/பெ. முருகன், சுதந்திரா நகர் 3வது தெரு, மதுரை மாவட்டம் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் இன்று 13.07.2026 ம் தேதி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இனிவரும் காலங்களில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

இது போன்று தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.