• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணிகளை, ஆணையாளர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jul 13, 2026

வீடு தேடி வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வடக்கு விளாங்குடி, சத்யா நகர், தீக்கதிர் பாலம் அருகில், ராமமூர்த்தி நகர் மற்றும் பாரதிதாசன் குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து, ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வடக்கு விளாங்குடி, சத்யா நகர் தீக்கதிர் பாலம் அருகில், ராமமுர்த்தி நகர் மற்றும் பாரதிதாசன் குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என தரம் பிரித்து தினந்தோறும் வாங்க வேண்டும்.
மேலும், வீடுகளில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு, விநியோகம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ராமமுர்த்தி நகர், பாரதிதாசன் குறுக்கு தெரு பகுதிகளில் குடியிருப்பவர்களிடம் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்குமாறும், குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு வார்டுகளில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்து சேகரிப்பு பணியில் ஈடுபடுமாறு தூய்மை பணியாளர்களிடம் ஆணையாளர் அறிவுறுத்தினார். மேலும், சாலைகளில் குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஆணையாளர் அவர்கள் மற்றும் மேயர் (பொ)/துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் பரவை மார்க்கெட்டில் காய்கறி ஏற்றிவரும் வாகங்கள் தொடர்பாகவும், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் கடைகள் தொடர்பாகவும், அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன் தினசரி மார்க்கெட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், பரவை மார்க்கெட் முதல் பைபாஸ் சாலை வரை இணைக்கும் சாலை அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் அபிராமி, சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் சுகாதார ஆய்வாளர் ராமநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.