• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மடியில் கனமில்லை, பா.ஜ.க-வுக்கு பயமுமில்லை” ; கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக் தாகூர் பேச்சு !!!

BySeenu

Jul 12, 2026

கோவை, சவுரி பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும் காங்கிரஸ் கட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு குரல் கொடு, மாணவர்களுக்கான குரல் என்று கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ;

நீட் தேர்வினால் இந்த ஆண்டு 5 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும், அனிதா உயிரிழந்த போது ஏற்பட்ட எழுற்சி கோவையில் கீர்த்தனா இறந்த போது ஏற்படவில்லை எனவும், சாதாரணமாக கடந்து செல்ல பார்க்கின்றோம் என தெரிவித்தார். எதுவுமே நடக்காத மாதிரி இந்த மத்திய பா.ஜ.க அரசு கடந்து செல்கின்றது என தெரிவித்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 3 எம்.பி க்கள் இறந்த குழந்தைகளின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றோம் எனவும், இன்று கோவை கீர்த்தனா இல்லத்திற்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிகாரன் எந்த சம்பாத்தியமும் செய்ய தெரியாதவன். ஊரை அடித்து உலையில் போடத் தெரியாதவன் என தெரிவித்த அவர்,
55 ஆண்களுக்கு பின்பு இப்போது 2 அமைச்சர்களை பார்த்து சந்தோஷபட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
பா.ஜ.க ,ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க வில் அவரை நிறுத்தினால் ஜெயிக்கலாம், இவரை நிறுத்தினால் ஜெயிக்கலாம் என நிறுத்தி பார்த்தனர் ஆனால் ஜெயிக்க முடியவில்லை எனவும்,
இப்போது கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து வேறு அமைப்பு பெயரில் ஒருத்தர் வர போகின்றார் என அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டார்.

தற்போது பா.ஜ.க வை எதிர்த்து எந்த கட்சியும் பேசுவதில்லை எனவும்,
எல்லாரும் அமைதியாகி விட்டனர் என தெரிவித்த அவர், ராமர் கோவில் பணத்தை திருடிக் கொண்டு இருக்கின்றனர் அது குறித்து யாரும் பேசவில்லை எனவும்,
பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை பார்த்து பழனிசாமிக்கும், மற்றவர்களுக்கும் பயம் என்பதால் பேசாமல் இருக்கின்றனர் எனவும், நமக்கு மடியில் கணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நீட் பேப்பர் வடமாநிலங்களில் லீக் ஆகி இருக்கின்றது, இதை ஆர்கனைஸ்டாக பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் செய்கின்றது எனவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் நீட் பேப்பர் லீக் ஆகின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மட்டும் நீட் பேப்பர் லீக் ஆவதில்லை என தெரிவித்த அவர், பா.ஜ.க தலைவர்களின் குழந்தைகளுக்கு எப்படி சீட் கிடைக்கின்றது என்றால், பேப்பர் லீக் ஆவதால் கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து மேடையில் யாரும் அமராமல் உங்களுடன் அமர்ந்து இருக்கின்றோம் என தெரிவித்த அவர், நமது
கட்சி நடைமுறைகளை மாற்றனும், தெளிவான கருத்தியலை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். பா.ஜ.க வை யாரும் எதிர்க்கவில்லை, சி.பி.எம், காங்கிரஸ் மட்டும் எதிர்க்கின்றனர் என தெரிவித்த அவர், இவ்வளவு நாளாக ஆட்சி செய்தவர்களுக்கும் இதில் ஏன் அக்கறை இல்லை எனவும், எந்த கட்சியும் மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

விஜய் முதல்வராக வந்தவுடன் பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என்ற நிலை மாறி விட்டது என தெரிவித்த அவர், இப்போது நம்முடைய காலம் வந்து இருக்கின்றது, எல்லாருடைய நம்பிக்கையாலும், உழைப்பாலும் நாம் முன்னேறுவோம், உங்கள் முக்கியத்துவம் எப்போதும் இருக்கும் எனவும், நாம் எல்லோரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியை மாற்றுவோம் எனவும் கூறி கட்சியினரை உற்சாகபடுத்தினார்.

5 தொகுதி ஜெயித்தாலும் , நாம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்து இருக்கின்றது, பூட்டிற்கு நாம் தான் சாவி என்ற நிலையில் இருக்கின்றோம், நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் நேரம் இது எது எனவும் தெரிவித்தார்.

யார் நல்லது செய்கின்றனரோ ?அவர்களுக்கான காலமாக மாறி விட்டது எனவும், காங்கிரஸ் கட்சி மட்டும் தான் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என இருக்கின்றோம் எனவும், மற்ற கட்சிகளிடம் இருந்து ரவுடிதனம், கேடிதனம் போன்றவற்றை காங்கிரஸ் கட்சியினர் கற்றுக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்பு கட்சியினர் ஒழுக்கமாக வந்தால் துண்டை வாங்கி கொள்கின்றேன் ,
தள்ளு, முள்ளு நடத்தினால் நான் கிளம்பிடுவேன் அது என் பழக்கம் என காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் மைக் மூலம் அறிவுறுத்தல் கொடுத்தார்.