• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

BySeenu

Jul 9, 2026

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் ஆகியோர் கலந்துகொண்டு கிறிஸ்தவ மகளிர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுபான்மைப் பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடைய வேண்டும். குடும்பச் செலவுகளுக்காகக் கணவரைச் சார்ந்திருக்காமல், பெண்கள் சுயதொழில் புரியும் வகையில் தையல் தொழில் போன்றவை பெரிதும் உதவும். தனது கணவர் சார்பாக மாநகர் முழுவதும் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் ரோட்டரி சங்கங்களின் கண்காணிப்பில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார், கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசு வழங்கும் பங்களிப்பை விட இரு மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் எவ்விதத் தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். திட்டங்களுக்குத் தேவையான நிதியைக் கேட்டுப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டாம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதே சமயம் இது போன்ற திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு தற்போது போதிய அளவில் இல்லை என்றும் அதிகாரிகள் இது குறித்து மக்களிடம் உழைப்பு உணர்வு ஏற்படுத்தினால் அதிக பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், 200 பேருக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தத் துறையில் பெண்கள் சுயதொழில் துவங்குவதற்கான பயிற்சிகள் வகுப்புகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்குவதற்கு அரசு தயாராக இருப்பதாக கூறினார். கவுண்டம்பாளையம் சாலை சாய்பாபா காலனி மேம்பாலம் தொடர்பான கேள்விக்கு தரம் சோதனை செய்து திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைகளில் நிலவும் எலிகள் பெருச்சாளிகள் தொல்லை குறித்தான கேள்விக்கு பெருச்சாளிகளை கூடிய விரைவில் களையெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். விடுதிகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை குறித்தும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் தற்போதைய கரூர் பயணம் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கோவைக்கு வருவது தொடர்பாக கூடிய விரைவில் அறிவிப்புகள் வரும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், தொடர்ச்சியாக இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்தார்.