• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாமும் கேரளாவை போல் மாறிவிடலாம்..,

Byமுகமதி

Jul 9, 2026

தமிழ்நாட்டில் தைல மரங்களையும் வேலிக்கருவை மரங்களையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் செல்வம் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரான அவர் அவர் பொறுப்பில் இருந்த போது அறிவித்த அறிவிப்பானது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அவர் பணி நிறைவு பெற்று விட்டார். ஆனாலும் இன்றைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அவரது ஆலோசனைகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் அவர் தமிழ்நாடு அரசின் ஆலோசனைப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வேலிக்கருவை மரங்களை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான மேல 3 வது தெருவில் உள்ள மேல நைனாரிக் குளத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதையும் நைனார் குளத்திற்கு நீர் வளர்த்து வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளதை அகற்றவும், நீர்வரத்து வருவதை உறுதி செய்யவும், தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா, முன்னிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்( ஓய்வு ) அ. செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை மாநகராட்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னாள் நீதி அரசர் செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, பல்வேறு அதிகாரிகளும் வருவாய்த் துறையினரும் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தனியார் நிலங்களில் உள்ள வேலிக்கருவைகளை அந்தந்த நிலத்தில் உரிமையாளர்களும் பொது இடங்களில் உள்ள வேலிக்கருவை மரங்களை ஊராட்சியாக இருந்தால் ஊராட்சி நிர்வாகமும் பேரூராட்சியாக இருந்தால் பேரூராட்சி நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமாக இருந்தால் நகராட்சி நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமாக இருந்தால் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மாண்பமை முன்னாள் நீதியரசர் செல்வம் அவர்களது உத்தரவு மட்டும் என்று இல்லாமல் நீதிமன்றமே உத்தரவிட்டிருப்பதால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளும் அரசுத்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கினர். அவர்கள் சரியாக தங்களது பணிகளைச் செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய மீண்டும் நீதியரசர் செல்வம் அவர்கள் களத்தில் இறக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்டத்திற்கு 5 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றார். கருவேலமரங்களை அகற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கியதாக தெரியவில்லை என்றும்,மாவட்டத்திற்கு 5 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா மட்டுமல்லாது சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் உடன் சென்றும் சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கண்மாய், பெருமாள்பட்டிக் கண்மாய், இடையமேலூர் கட்டாணிப்பட்டிக் கண்மாய்களில் உள்ள கருவேலமரங்கள் அகற்றிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில் சிவகங்கை மாவட்ட, கண்மாய்ப் பகுதியில் நீர்நிலை மற்றும் நீர்நிலை அல்லாத அரசு புறம்போக்குநிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் சீமை கருவேலை மரங்கள் வளர்ந்துள்ள இடங்கள் மற்றும் இதுவரை அகற்றப்பட்ட இடங்கள் மற்றும் அகற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், சுற்தனியார் பட்டா விளைநிலங்களுக்கு அருகில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அந்த அடிப்படையில் கருவேல மரங்கள் அகற்றும் பணி குறைந்த அளவே நடைபெற்று வருகிறது. அதற்குப் போதிய நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்யாததால் பெரும்பாலான பகுதிகளில் கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல் மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டால் மட்டுமே அண்டை மாநிலமான கேரளாவை போல நாம் விவசாயத்தில் பலன் பெற முடியும். எனவே தனியார் நிலங்களில் உள்ள அந்த நிலங்களில் உரிமையாளர்களும் இந்த சமூகத்தில் அக்கறை உள்ள, அரசுப் பணிகளிலும் உள்ளாட்சித் துறைகளிலும் இருக்கும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று மாவட்டத்தில் ஆய்வு செய்து வருவதாகவும் ஓரளவு வேலை நடந்து வருவதாகவும், தனியார் பட்டா நிலங்களில் சீமைக்கருவேல் மரங்கள்
அப்படியே உள்ளதால் அவர்களும் ஒத்துழைப்புத் தந்து எடுத்தால் தான் நல்லது என்றும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணம் இருந்தால் தான் இதனை அகற்ற முடியும் எனவும். சீமைக்கருவேல் மரங்களை அகற்ற இதுவரை தமிழக அரசு நிதி ஒதுக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை என்றும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 கோடி நிதி ஒதுக்கினால் தான் சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அகற்ற முடியும் சீமைக்கருவேல் மரங்கள் என்பது மனித உடலுக்கு எப்படி புற்றுநோய் எவ்வளவு கெடுதலானதோ அதேபோல சீமை கருவேல் மரங்கள் மண்ணுக்கு கெடுதல் ஆனது என்றும் தெரிவித்தார்.