• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

முத்தனம்பட்டி கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு..,

ByS.Ariyanayagam

Jul 9, 2026

திண்டுக்கல் அருகே முத்தணம்பட்டி கண்மாயில் மணல் திருட்டு நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் இந்த சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கண்மாயின் இயற்கை அமைப்பு பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.