மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையம் தென் தமிழக மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Airborne Aviation அகாடமி நிறுவனர் ஆனந்த கிருஷ்ணா கூறுகையில்,
“சென்னை போன்ற மெட்ரோ நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாத தென் தமிழக மாணவர்களின் வசதிக்காக இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்.
விமான நிலைய Ground Staff மற்றும் Airport Operations பயிற்சிகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக வளர்ச்சி, கேமரா கையாளுதல், ட்ரோன் இயக்கம், AI தொழில்நுட்ப பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தரமான பயிற்சிகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம்.

ஜென் சி Newsreading Academy நிறுவனர் யுவன்ராஜ் முருகேசன் தலைமையில் செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு (Anchoring), நேர்காணல், Voice & Diction, Camera Facing Skills உள்ளிட்ட ஊடகத் துறைக்கான தொழில்முறை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த மையங்களில் வேலை உத்தரவாதம் (Job Guarantee) வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, நேர்காணல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான திறன்களை (Skills) மாணவர்களிடம் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
மெட்ரோ நகரங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 10% முதல் 20% வரை குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் துறையில் பணியாற்றிய நிபுணர்கள் நேரடியாக பயிற்சி அளிக்கின்றனர். கப்பல் மற்றும் விமான நிலையத் துறைகளில் பணிபுரியும் அனுபவத்தின் அடிப்படையில், அந்த இடத்தை அடைய நாங்கள் சந்தித்த சிரமங்களை தென் மாவட்ட மாணவர்கள் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம். குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் பெரிய துறைகளில் சாதிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

தென் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.





