• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சிறு வியாபாரிகளின் கடைகளை அடாவடியாக அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் …

ByK Kaliraj

Jul 8, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோயில் முன்பு சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டி மூலமும் , இருசக்கர வாகனம் மூலமும், சாலை ஓரத்தில் அமர்ந்தும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர் .

மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடை வைக்க கூடாது என வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று வழக்கம் போல சிறு வியாபாரிகள் பழ வியாபாரம் செய்து வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.மேலும் ஒரு மூதாட்டி சாலையில் அமர்ந்து மாம்பழ வியாபாரம் செய்த நிலையில் அவரது மாம்பழங்களை கூடையுடன் குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற நிலையில் அந்த மூதாட்டி அழுது கொண்டே அந்த வாகனத்தில் பின்னால் சென்றது.

காண்போரையும் வேதனை அடைய செய்தது .மேலும் வியாபாரம் செய்த வியாபாரிகளின் தள்ளு வண்டியை அடாவடியாக குப்பை வண்டியில் ஏற்றி சென்றதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.